ஆசிரியரை பற்றி

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்…

அறிமுகம்:

கண்ணியத்திற்குரிய மவ்லவி பி.ஏ.காஜா முயீனுத்தீன் பாகவி அவர்கள் நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையத்தில் பிறந்தார்கள். இவர்களின் தந்தை அஹ்மது மைதீன், தாயார் ஜமீலா பீவி.

பி.ஏ.காஜா முயீனுத்தீன் பாகவி அவர்கள், 1976ல் தேவிப்பட்டினம் அமானியா அரபிக் கல்லூரியில் திருகுர்ஆனை மனனம் செய்து, இராமநாதபுரம் மாவட்டத்தில் ஹாஃபிழ் பட்டம் பெற்ற முதல் மாணவர் எனும் சிறப்பை பெற்றார்கள்.

1986ல் அரபிக் கல்லூரிகளின் தாய் கல்லூரியான வேலூர் அல்-பாக்கியாதுஸ் ஸாலிஹாத்தில் முதுகலை ஷரீஅத் பட்டம் பெற்றார்கள்.

1987ல் திருவிதாங்கோடு அல்-ஜாமிவுல் அன்வர் அரபிக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்தார்கள்.

1988ல் கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் பெரிய பள்ளியின் தலைமை இமாமாக பணிபுரிந்தார்கள்.

1989ல் இவர்களது மார்க்கச் சேவையை பாராட்டி இஸ்லாமிய நல சங்கம் “அருள்மொழி செல்வர்” என்ற பட்டம் வழங்கி சிறப்பித்தது.

1990ல் இஸ்லாமிய கலாச்சார சங்கம் ‘மணிமொழி நாவலர்’ என்ற பட்டம் வழங்கி கௌரவப்படுத்தியது.

1993ல் சிங்கப்பூர் அப்துல் கபூர் மஸ்ஜிதில் ரமளான் மாதம் முழுவதும் தராவீஹ் தொழுகையும், தொடர் சொற்பொழிவும் நிகழ்த்தினார்கள்.

1994ல் கப்பல் மூலமாக முதல் ஹஜ் புனித யாத்திரை சென்றார்கள்.

1989 முதல் இன்று வரை மேலப்பாளையத்தில் உள்ள உஸ்மானியா அரபிக் கல்லூரியில் மூத்த பேராசிரியராக சிறப்பான முறையில் பணிபுரிந்து வருகிறார்கள், மேலும் மேலப்பாளையம் பெரிய குத்பா பள்ளியின் தலைமை இமாமாகவும் பணியாற்றி வருகிறார்கள்.

சமூக விழிப்புணர்வு தொண்டு அமைப்பின் தலைவராகவும், தமிழ் மாநில ஜமாத்துல் உலமா சபையின் துணை தலைவராகவும், தமிழ்நாடு ஹஜ் கமிட்டியின் உயர்மட்டக் குழு உறுப்பினராகவும், அல்-நூர் ஹஜ் சர்வீஸ்’ன் தலைமை வழிகாட்டியாகவும் பொறுப்பு வகிக்கிறார்கள்.

கடந்த 23 வருடங்களாக குர்ஆன் தஃப்சீர் வகுப்பு நடத்தி வருகிறார்கள்.

கடந்த 15 வருடங்களாக பெண்களுக்கான சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியும் நடத்தி வருகிறார்கள்.

இன்றைய இளைஞர்கள், பெரியவர்கள், படித்தவர்கள், பாமரர்கள், ஆண்கள், பெண்கள் இவர்களின் மனங்களில் என்னென்ன வினாக்கள்-சந்தேகங்கள் குழப்பங்கள் ஏற்படுமோ அவற்றை எல்லாம் தீர்க்கும் அருமருந்தாக “சத்தியமே வெல்லும்” என்ற நூல் திகழ்ந்து கொண்டிருக்கிறது.

மார்க்கச் சொற்பொழிவிற்காக முதன் முதலில் பயணம் மேற்கொண்ட நாடு பங்களாதேஷ் ஆகும், அதன் பிறகு இலங்கை, சிங்கப்பூர், மலேஷியா, தாய்லாந்து, புர்னே, சவூதி அரேபியா, துபாய், அபுதாபி, குவைத், உள்ளிட்ட வெளிநாடுகளிலும் மார்க்க சொற்பொழிவுகள் ஆற்றி வருகிறார்கள்.

அன்புடன்,
ஹிக்மத் நண்பர்கள்